இலங்கை – இங்கிலாந்து முதலாவது டி20 போட்டி தாமதம்
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியின் நாணயச் சுழற்சி தாமதமடைந்துள்ளது.
மாலை 06.30 மணிக்கு நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைச் சூழ லேசான மழை பெய்தது.
எவ்வாறாயினும், தற்போது மீண்டும் லேசான மழை பெய்வதால் நாணயச் சுழற்சியைத் தாமதப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி புரூக் (Harry Brook) செயற்படுவதுடன், இலங்கை அணியைத் தசுன் ஷானக (Dasun Shanaka) வழிநடத்துகின்றார்.
