
பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் பலி
கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் வீட்டிற்கு அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
07 ஆம் வகுப்பு கல்வி பயிலும் 11 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனுக்கு மனநலக் குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று வியாழக்கிழமை அவிஸ்ஸாவெல்ல மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல – மெதகொட பொலிஸ் முன்னெடுத்துள்ளனர்.
