
தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுக்கான ஒப்பந்தம் நாளை கைச்சாத்து
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,750 ரூபா வரை அதிகரிப்பதற்குத் தேவையான இறுதி ஒப்பந்தங்கள் நாளை வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக (200 ரூபா அதிகரிப்பு) உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிகமாக 200 ரூபா வருகைக்கான கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
இந்த வேதன உயர்வு தொடர்பான உடன்படிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடையில் நாளை வெள்ளிக்கிழமை காலை அமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இது தோட்டத் தொழிலாளர்களின் 200 ஆண்டுகால வரலாற்றில் வழங்கப்பட்ட அதிகூடிய வேதன உயர்வு என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
