பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
-மஸ்கெலியா நிருபர்-
தரம் 1 க்கு மாணவர்களை உள்வாங்கும் கால்கோள்விழா, இன்று வியாழக்கிழமை, பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில், அதிபர் மார்சல் ராஜநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் எம்.செந்தூர்வேல் கலந்து கொண்டார்.
பெற்றோர்களின் பங்களிப்புடன், பாடசாலை அபிவிருத்திகுழுவினால் வடிவமைக்கப்பட்ட, பாடசாலை மண்டப நுழைவாயிலுக்கான கூரையிடல் வேலைத்திட்டம், நிறைவு செய்யப்பட்டு, உத்தியோகப்பூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது.





