சுதந்திர தின கொண்டாட்ட கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்-

78-வது தேசிய சுதந்திர தினத்துடன் இணைந்து மாகாண மட்டத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக, கிழக்கு மாகாண சுதந்திர தின விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் நாமல் தலங்கம, திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், முப்படை பிரதிநிதிகள், காவல்துறை, காவல் விசேட அதிரடிப் படை, சிவில் பாதுகாப்புப் படை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.