மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்-

யா/இணுவில் இந்துக் கல்லூரியில் தரம் 1ல் இணையும் மாணவ மாணவியர் ஒவ்வொருவருக்கும் 16000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இணுவில் பொது நூலக இணுவில் – கனடா அமைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப விரிவுரை மண்டபத்தில், பொது நூலக தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.

நிகழ்வில் இணுவில் பொது நூலகப் போசகர் இரா.அருட்செல்வம், யா/ இணுவில் இந்து கல்லூரி பிரதி அதிபர் மிருளாயினி சிவராமகிருஷ்ணனிடம் கையளித்தனர்.

இவ்வருடமும் பல மாணவர்களை உள்ளீீர்க்கும் நோக்கோடு மாணவர்களுக்கான சீருடை, சாப்பாட்டுப் பெட்டி, தண்ணீர்ப் போத்தல், சப்பாத்து, புத்தகப்பை, கொப்பி – புத்தகங்கள் மற்றும் எழுது கருவிகள் உட்பட அனைத்துப் பொருட்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன

வருடத்தில் ஒரு தடவை இச்செயற்திட்டம் நடைபெற்று வருகின்றதுடன் இது ஆறாவது கட்டமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

இந் நிகழ்வில் நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், ஆர்வலர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.