வனத்திற்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு!

-மஸ்கெலியா நிருபர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள, புரவுன்லோ தோட்ட பகுதியில், மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் கரையோர பகுதியில் மாணாபுல் பற்றைக்கு, இன்று புதன்கிழமை காலை 11.45 அளவில் விஷமிகள் தீ வைத்துள்ளனர்.

இதன் காரணமாக, சுமார் 10 ஹெக்டேயர் மாணாபுற்களுடன் டேப்பன்டைன் வனப் பகுதி தீயில் எரிந்து நாசமானது.

இப் பகுதியில், தற்போது கடுமையான உஷ்ணம் நிலவிவரும் வேளையில், இந்த தீயினால் வனஜீவராசிகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஸ்கெலியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.