
இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே சந்திப்பு!
-யாழ் நிருபர்-
இலங்கைக்கான கனடா தூதுவர் இஸபெல் மார்டின், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவர் திரு சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில், கடந்த திங்கட்கிழமை சந்தித்து உரையாடியிருந்தார்.
இச் சந்திப்பில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், நிலைப்பாட்டினையும் கனடா தொடர்ச்சியாக ஆதரித்து வரும் பின்னணியில், அதற்காக இலங்கை தமிழரசு கட்சியினர் நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்தும் எதிர்காலத்தில் அத்தகைய ஆதரவை நாடி நிற்பதை அவருக்குத் தெரியப்படுத்தியதாக, பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
