சீனா – ஜப்பான் இடையே விரிசல்! விமானப் பயணங்கள் ரத்து

 

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானத் தகவல் தளமான ‘பிளைட் மாஸ்டர்’ (Flight Master) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சீனா – ஜப்பான் இடையிலான 49 விமானப் பாதைகளில் பெப்ரவரி மாதத்திற்கான அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி சீனாவிலிருந்து ஜப்பானுக்கு செல்லும் விமானங்களின் இரத்து விகிதம் ஜனவரி மாதத்தில் 47.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது டிசம்பர் மாதத்தை விட 7.8 சதவீதம் அதிகமாகும்.

சீனாவின் 3 முக்கிய விமான நிறுவனங்களான ஏர் சீனா (Air China), சீனா ஈஸ்டர்ன் (China Eastern) மற்றும் சீனா சௌதர்ன் (China Southern) ஆகியவை  நேற்று  திங்கட்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.