
போதைப்பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவுவது குறித்து காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
குளிர்பானம், பஞ்சு மிட்டாய், டொபி, பிஸ்கட் போன்றவற்றைப் பயன்படுத்தி பாடசாலைகளில் மாவா மற்றும் பாபுல் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பாக முன்னதாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, 5 கிராமுக்கு மேல் கொக்கேன், ஐஸ் மற்றும் ஹெராயின் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தங்கள் பகுதியில் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இடம்பெற்றால் காவல்துறைக்கு தகவல் அளிப்பது பொதுமக்களின் பொறுப்பு என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
