மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில், 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த மனோஜினி என்ற தாயே, நேற்று திங்கட்கிழமை இவ்வாறு 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
குழந்தைகளும், தாயும் நலமுடன் இருப்பதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

