
வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்
கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இந்தியாவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ (Mother of all deals) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தமானது, 200 கோடி மக்கள் தொகையையும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பகுதியையும் கொண்ட ஒரு பிரம்மாண்ட சந்தையை உருவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
