காணாமல் போன முச்சக்கரவண்டி சாரதி காயங்களுடன் மயக்கமுற்ற நிலையில் மீட்பு!

திருகோணமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, 3 பேர் காணாமல் போயுள்ள நிலையில், ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை வைத்தியசாலை தரிப்பிடத்திலிருந்து, ஜெயக்குமார் எனப்படும் முச்சக்கரவண்டி சாரதி, நேற்று திங்கட்கிழமை காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை, நொச்சிகுளம் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் உடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடைய முச்சக்கரவண்டி, மிக மோசமாக சேதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்