
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, நேற்று திங்கட்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,900 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
