‘டிட்வா’ புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை புனரமைக்கும் தேசியத் திட்டம் நாளை ஆரம்பம்

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘கட்டியெழுப்புவோம் – உறுதியின் நல்லிணக்கம்’ (Godanagamu Adhisthanaye Sanhinda) தேசியத் திட்டம் நாளை  செவ்வாய் கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவல்படி, குறித்த சூறாவளியினால் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.