இலங்கையின் ஏற்றுமதியில் சாதனை

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் சாதனை அளவை எட்டியுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவைகள் மூலமான மொத்த ஏற்றுமதி வருமானம் 17,252.15 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகையானது இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.