இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை 12000 ரூபாயால் அதிகரித்துள்ளது
செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை 385,000 ரூபாயாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 397,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கடந்த வாரம் 356,000 ரூபாயாக நிலவிய 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 362,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
