மட்டு.வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

மட்டக்களப்பு வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலை ஏற்பாட்டில், லண்டன் கார்திகேசு சிவநேசனின் நிதி அனுசரணையில், திரு.க.துரைராஜா தலைமையில் வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலயம் முன்பாகவுள்ள அன்னதான மடத்தில் பொங்கல் விழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், பின்னர் காலாசார மரபுடன் அதிதிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பற்றுதலுடன் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், ஆசியுரை, மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள், கெளரவிப்பு நிகழ்வு, அதிதிகள் உரை, கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை வந்தாறுமூலை வட்டார உறுப்பினர் த.பிரபாகரன், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய குருக்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.