
யாழ்.அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த பாடசாலைக்கு உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிராமப்புற பாடசாலைகளின் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த விளையாட்டு உபகரணங்கள் அவரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
