யாழ்.மாவட்டத்துக்கு கிடைத்த 14 தேசிய விருதுகள்!

-யாழ் நிருபர்-

கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன.

அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது.

பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடங்களைப் பெற்று தேசிய மட்டத்தில் ஐந்து போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்து சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குப் பெருமை தேடித்தந்த சாதனையாளர்களின் விபரங்கள் வருமாறு.

1) `திறந்த பிரிவு கவிதையாக்கம்`
முதலாமிடம் : திரு. தம்பித்துரை குணத்திலகம் (சில்லாலை மேற்கு, பண்டத்தரிப்பு)

2) `திறந்த பரிவு நாட்டார் கலைகற்றல் (ஆய்வு)`
இரண்டாமிடம் : அபிராமி (அல்லுண்ணி வீதி, சண்டிலிப்பாய்)

3) `திறந்த பரிவு பாடலாக்கம்`
மூன்றாமிடம் : திரு. தம்பித்துரை குணத்திலகம் (சில்லாலை மேற்கு, பண்டத்தரிப்பு)

4) ‘அதி சிரேஷ்ட பிரிவு பாடல் நயத்தல் போட்டி`
முதலாமிடம் : த.அக்ஷரா – (யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி)

5)`சிறுவர் பிரிவு கையெழுத்துப் போட்டி` இரண்டாமிடம் : எஸ். வயோமிகா (யா/மானிப்பாய் சத்திய சாயி பாடசாலை)

விருது மற்றும் சான்றிதழுடன் பணப்பரிசாக முதலாமிடம் பெற்றோருக்கு பதினைந்தாயிரம் (15,000) ரூபாவும், இரண்டாமிடத்துக்கு பன்னிரண்டாயிரத்தி ஐநூறு (12,500) ரூபாவும், மூன்றாமிடத்துக்துக்கு பத்தாயிரம் (10,000) ரூபாவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்