தெற்கு அதிவேக வீதியில் விபத்து
தெற்கு அதிவேக வீதியின் 86.6 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
மத்தல நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதிவேக வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது காரைச் செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த, காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
