அழையா விருந்தாளியாய் பெண்ணின் மார்பில் படுத்திருந்த மலைபாம்பு

ஆஸ்திரேலியாகடந்த திங்கட்கிழமை நள்ளிரவு தனது படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மார்பில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவில் திடீரென விழித்துக் கொண்ட குறித்த பெண் தனது மார்பின் மேல் கனமான பொருள் ஒன்று இருப்பதை உணர்ந்துள்ளார். அது தனது செல்ல நாய்க்குட்டி என நினைத்து, கைகளால் துழாவிய போது அது வழுவழுப்பாகவும் நெளிந்து கொண்டும் இருந்ததை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அருகில் இருந்த படுக்கையில் இருந்தது சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு என்பது தெரியவந்தது.

பின்னர் குறித்த பெண்ணின் கணவர் வந்து பார்த்தபோது அந்தப் பெண்ணின் மீது மலைப்பாம்பு படுத்திருப்பதாக கூறினார்,அத்துடன் அவர்களது செல்லப்பிராணிக்கு ஆபத்து என தெரிந்து பாதுகாத்த பின்னர் அவர் தனது மனைவியை காப்பாற்றினார். இதன் போது அப்பெண் பயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ரேச்சலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், செல்லப்பிராணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பாம்பு ‘கார்ப்பெட் மலைப்பாம்பு’ இனத்தைச் சேர்ந்தது என்றும், இது விஷமற்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதிகளில் இந்த வகை பாம்புகள் பொதுவாகக் காணப்படுவதுடன், பறவைகள் மற்றும் சிறிய உயிரினங்களை உணவாகக் கொள்ளும் இனமாகும்.