
முன்னேறும் உலகப் பொருளாதாரம்
சர்வதேச வர்த்தக இடையூறுகள் மற்றும் நெருக்கடி இருந்த போதிலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக அளவிலான முதலீடு காரணமாக அபாயங்கள் தொடர்கின்றதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாக நிலையானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் வளர்ச்சியே உலகளாவிய பொருளாதார வளர்ச்சியிலும் பிரதிபலிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகளாவிய தொழிலாளர் சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவின் ‘சுனாமி’ உருவாகி வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
