கோழி கூட்டில் பொறுத்த பட்டிருந்த மின்சாரம் – நேர்ந்த சோகம்
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தில் கோழி கூட்டில் பொறுத்த பட்டிருந்த மின்சாரம் பாய்ந்து நேற்று வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று மதியம் கடும் சுகவீனம் காரணமாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது என்று கூறியதால் கடும் முயற்சி செய்து முதலுதவி சிகிச்சை அளிக்க பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணித்து விட்டார்.
எனினும் இன்று சனிக்கிழமை காலை விசாரணை மேற்கொண்ட போது அவர் அவரது கோழி பண்ணைக்கு நீர் எடுத்து செல்லும் போது மின்சாரம் தாக்கியதில் சுய நினைவு இலந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மரணித்தவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
இது தொடர்பான தேலதிக விசாரணைகளை பொலிசார் தேற்கொண்டு வருகின்றனர்.
