சிவனொளி பாதமலைக்கு சென்றவர்கள் மீது குளவிக்கொட்டு

-மஸ்கெலியா நிருபர்-

சிவனொளி பாதமலைக்கு சென்ற ஆறு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச் சம்பவம் பன்னிப்பிட்டிய பகுதியில் இன்று சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இடம் பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், இச் சம்பவத்தில் ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு நல்லதண்ணியில் உள்ள அவசர காவுவண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட்னர்.

அவர்களில் 20 வயது முதல் 33 வயது மதிக்கத்தக்க நான்கு ஆண்களும் இரு பெண்களும் ஆவர்..

ஆறு பெரும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.