
மேற்கு துருக்கியில் வலுவான நிலநடுக்கம்!
மேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தில் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 00:24 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 11.04 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புர்சா, இஸ்மிர், யலோவா மற்றும் குட்டாஹ்யா மாகாணங்களிலும் இது வலுவாக உணரப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
