மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்து உயிரிழந்த பெண்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

குதித்த இளம் பெண்ணின் சடலம்  தோனி மூலம் கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இளம் பெண் தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.