ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுவிஸ் திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலில் பெட்ரா வோல்பேயின் சுவிஸ் திரைப்படமான லேட் ஷிப்ட் இறுதிப் பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டது.

பிரான்ஸ் (எ சிம்பிள் ஆக்சிடென்ட்), பிரேசில் (தி சீக்ரெட் ஏஜென்ட்), நார்வே (சென்டிமென்ட் வேல்யூ), ஸ்பெயின் (சிராட்) மற்றும் துனிசியா (தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாப்) ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் இன்னும் போட்டியில் உள்ளன.

98வது அகாடமி விருதுகள் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.