மட்டக்களப்பு மயிலத்தமடு-மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் பட்டிப்பொங்கல்

மயிலத்தமடு  மற்றும் மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் பட்டிப்பொங்கல், நேற்று வியாழக்கிழமை, மயிலத்தமடு மேய்ச்சல்தரை பகுதியில், அதன் தலைவர் சீனித்தம்பி தியாகராசா நிமலன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை கோரிய, மயிலத்தமடு மற்றும் மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் பகலிரவு போராட்டமானது, மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதிக்கருகில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

பண்ணையாளர்களின் போராட்டமானது, 856 வது நாட்களை கடந்து செல்கின்றதும், தீர்வு கிடைக்காததுமான நிலையில், பண்ணையாளர்கள் நேற்று பட்டிப்பொங்கலை கொண்டாடினார்கள்

பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும், மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்கும், இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பட்டிப்பொங்கல் நிகழ்வுக்கு, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், வெலிக்கந்தை மகாவலி திட்ட முகாமைளாளர், செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.