தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய வர்த்தகப் போர் அச்சம் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அந்தவகையில், இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 381,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,057 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.