வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது இளைஞனின் சடலம் மீட்பு!

 

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீடொன்றின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த, காரைதீவு-12 பிரதான வீதியை சேர்ந்த, 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக குறித்த இளைஞர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தூக்கில் தொங்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு, சடலம் உறவினர்களிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.