குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

-மஸ்கெலியா நிருபர்-

 

குளவி கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்கள், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம், இன்று புதன்கிழமை மதியம் 1 மணியளவில் இடம் பெற்றுள்ளது, என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட பிரிவில், தொழிலாளர்கள் பணி புரிந்து கொண்டு இருந்த வேளையில், அதிக உஷ்ணம் காரணமாக குளவி கூடு கலைந்து கொட்டியதில், ஆண் தொழிலாளர்கள் ஐவர், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், என தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள், தோட்ட நிர்வாகி மற்றும் தோட்ட வைத்தியர் மூலம் உடனடியாக முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.