வானிலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் வறண்ட வானிலையுடன் காலை வேளையில் மூடுபனியும் ஏற்படக்கூடும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் மேல்இ சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.