கெட்டம்பே மேம்பாலம்: உள்நாட்டு நிதியில் நிறைவு செய்ய முடிவு!

கண்டி – கெட்டம்பே மேம்பாலத் திட்டத்தை வெளிநாட்டு கடன்களின்றி, உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நிறைவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பாலத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து பிரதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கமைய இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் 2019 ஜூன் 20 அன்று கையெழுத்தானது.

ஹங்கேரி நாட்டு கடன் வசதியின் கீழ் 2021 ஒகஸ்ட் 16 அன்று இதற்கான பணிகள் தொடங்கின.

இதனையடுத்து கடன் வசதி ரத்து செய்யப்பட்டதையடுத்து, 2022 மே 14 அன்று கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

தற்போது இத்திட்டத்தை வெளிநாட்டுக் கடனின்றி, பொது வருவாயிலிருந்து பெறப்படும் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி முடிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.