நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் சேவை வழமைக்கு

தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கமைய, மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன் மூலம் 900 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.