
காலி மாவட்ட செயலகத்திற்கு புதிய செயலாளர்
காலி மாவட்டச் செயலாளர் அல்லது அரசாங்க அதிபர் பதவியிலிருந்து எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள டபிள்யூ.ஏ. தர்மசிறிக்குப் பதிலாக, கே.யு. சந்திரலால் (K.U. Chandralal) புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இவர், எதிர்வரும் 2026.01.26 முதல் தனது பணிகளைப் பொறுப்பேற்பார்.
