
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றது.
முன்னதாக இந்தத் திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் (Censor Board) தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
