வைத்தியர்கள் மீண்டும் போராட்டத்தில்!

 

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 2026 பாதீட்டுத் திட்டத்தில், வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படவில்லை.

இதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதுடன், எட்டப்பட்ட உடன்பாடுகளும் நிறைவேற்றப்படவில்லை.

சுகாதாரத் துறையில் நிலவும் அதிருப்தி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.

மருத்துவத் துறையினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு முறையான மற்றும் அர்த்தமுள்ள தீர்வுகள் கிடைக்கும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.