
மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
மாத ஆரம்பத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், பண்டிகைக் கால கேள்வியின் அதிகரிப்பு அனைத்துத் துணைக் குறிகாட்டிகளினதும் வளர்ச்சிக்குச் சாதகமாகப் பங்களித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் உற்பத்தித் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த மாதத்தில் 60.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவு மற்றும் பானங்கள் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, டிசம்பர் மாதத்தில் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தித் துணைக் குறிகாட்டிகள் உயர்வடைந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
