இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா அமெரிக்கன் கல்லூரியினால் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஸ்ரீநகர் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மேலும், இணைப்பாளர் இரா.மேகநாதன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கல்லூரியின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ் சந்திரமோகன், நிர்வாக முகாமையாளர் எஸ் காந்தரூபன், தொழிலதிபர் எம்.சதாசிவம் முதலானோர் தெளிவூட்டல் வழங்கினார்கள்.