குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் பதிவு!

இலங்கையில் இன்று சனிக்கிழமை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் வெப்பநிலை 8.0 டிகிரி செல்சிஸாகக் குறைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகாலை வேளையில் பண்டாரவளையில் 11.6 டிகிரி செல்சிஸ் குறைந்தபட்ச வெப்பநிலையும், பதுளையில் 14.4 டிகிரி செல்சிஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

வடமத்திய மாகாணத்தில், பொலன்னறுவையில் 19.4 டிகிரி செல்சிஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் இன்று காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.