வரலாற்று சிறப்பு மிக்க புல்லாவெளி செபஸ்தியாருக்கு கொடியேற்றம்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயக கொடியேற்ற நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது.
வருகின்ற 19-1-2026 ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும் அதையடுத்து 20-1-2026 ஆம் திகதி பெருவிழா திருப்பலியும் செபஸ்தியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட இருக்கின்றது.
கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன், புல்லாவெளி புனித செபஸ்தியாரின் பெருவிழாவை கொண்டாட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வந்ததை அவதானிக்க முடிந்தது.




