எதிர்கட்சி தலைவரை சந்தித்தார் ஜூலி சுங்!

அமெரிக்காவின் தூதுவராக 04 ஆண்டுகாலம் பதவி வகித்த  ஜூலி சுங் நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது ​​சமீபத்திய காலகட்டத்தில் இலங்கைக்கு தூதர் சுங் வழங்கிய ஆதரவுக்கு பிரேமதாச தனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்தார்.

“இந்த நாட்டில் தூதராக அவர் ஆற்றிய சிறந்த சேவை ஆழ்ந்த பாராட்டுகளுடன் நினைவுகூரப்படும்,” என்று அவர் தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.