
சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் கடற்படையினரால் பறிமுதல்
இலங்கை கடற்படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, மகாவலி ஆற்றின் உப்பாறு பாலத்திற்கு அருகில், சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் ஏற்றப்பட்ட ஐந்து படகுகளை பறிமுதல் செய்தனர்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள, எஸ்.எல்.என்.எஸ் கோகண்ணாவுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலுடன் சேர்த்து, சுமார் 30 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் மீட்கப்பட்டது.
படகுகள், மணல் மற்றும் மதுபானம் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும், மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக, கடற்படையினர் தெரிவிக்கினறனர்.
