
தைப்பொங்கலன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!
-கிளிநொச்சி நிருபர்-
யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை தைப்பொங்கலன்று அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டக்கச்சி பத்து வீட்டு பகுதியைச் சேர்ந்த ராஜீவன் விதுசன் (வயது 20) மற்றும் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த நாகராஜா ஜீவராஜ் (வயது 24)
உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
