விஜய்யின் ஜனநாயகனுக்கு தொடரும் சோதனை!

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான படம் ஜனநாயகன்.

இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாவதில் தாமதமாகியுள்ளது.

இந்தநிலையில் ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழக்கு தொடர்பில் படத் தயாரிப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில், படத்திற்கும் போதுமான விளம்பரங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.

3 மாதத்திற்கு பின்னர் படத்தை பார்க்க மக்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.

எனவே இருநீதிபதிகள் தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைக்கேட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.