அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 3 வர்த்தகர்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

கம்பஹா மாவட்டத்தில், அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு, நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், குறித்த மூன்று வர்த்தகர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, வெலிசறை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை 300,000 ரூபா அபராதம் விதித்தது.

ஒரு வர்த்தகருக்கு 100,000 ரூபா வீதம் மூவருக்கும் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஜா-எல பகுதியில் உள்ள கடையொன்றில், கீரி சம்பா அரிசியை கட்டுப்பாட்டு விலையை மீறி, ஒரு கிலோகிராம் 308 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது.
ஜா-எல பொதுச் சந்தை பகுதியில் உள்ள கடையொன்றில், சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி, ஒரு கிலோகிராம் 275 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது.
கந்தானை பகுதியில் ஒரு கடையில், கீரி சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி, ஒரு கிலோகிராம் 280 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலை விதிமுறைகளை மீறும் வர்த்தகர்கள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என்று, நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.