பொங்கல் தினத்தில் அதிரும் மரக்கறி விலை

தைப்பொங்கல் பண்டிகை நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் ஏற்றத்தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

இதற்கமைய நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கோவா 230 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டதுன், தம்புள்ளையில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோகிராம் கரட், நுவரெலியாவில் 380 ரூபாய்க்கும், தம்புள்ளையில் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு, நுவரெலியாவில் 340 ரூபாய்க்கும், தம்புள்ளையில் 320 ரூபாய்க்கும் வி;ற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோகிராம் லீக்ஸ் நுவரெலியாவில் 360 ரூபாய்க்கும் தம்புள்ளையில் 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, அண்மைய நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மிளகாய் வகைகளின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நுவரெலியாவில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 700 ரூபாய்க்கும், சிவப்பு குடை மிளகாய் ஒரு கிலோகிராம் ஆயிரத்து 100 ரூபாய்க்கும், பச்சை குடை மிளகாய் ஒரு கிலோகிராம் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அத்துடன், தம்புள்ளையில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 650 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோகிராம் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இஞ்சி ஒரு கிலோகிராம் 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.