
மன்னாரில் களையிழந்த தைப்பொங்கல் வியாபார நடவடிக்கை
-மன்னார் நிருபர்-
தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் தமிழர்களின் திருநாள்.இதனை முன்னிட்டு மக்கள் அரிசி, பால், வெல்லம், கரும்பு, மஞ்சள், இஞ்சி, புதிய பானைகள் பழங்கள் காய்கறிகள் புத்தாடைகள் பாத்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்து பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரில் வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் மன்னாரில் தைப்பொங்கல் வியாபாரம் களையிழந்துள்ளது.குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் காரணமாக மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.
