மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கான நடமாடும் சேவை
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை இன்று புதன்கிழமை இக்பால் நகர் பல்தேவை கட்டிடத்தில் இடம்பெற்றது
மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.
இதன்போது காணி ஆவணம் தொடர்பான ஆலோசனை,அஸ்வெசுவ, அரசாங்க கொடுப்பணவுகள் தொடர்பான ஆலோசனைகள்,இறப்பு பிறப்பு பதிவுகளுக்கான வழிகாட்டல், மக்களின் குறைபாடுகளை கேட்டறிதல்,ஆயுர்வேத வைத்திய சேவை என பல சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன .
இவ் நடமாடும் சேவையில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு சேவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலடிக்குச் சென்று மக்களுக்கு சேவை வழங்கும் இவ் நடமாடும் சேவையானது ,ஒவ்வொரு புதன்கிழமையும் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.












